இந்நிலையில், இன்று நடைபெற்ற திருமணத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதுதொடர்பாக புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; சென்னையில் நடைபெற்ற திரைப்பட இயக்குநர் சங்கர் அவர்களின் மகள் ஐஸ்வர்யா சங்கர் – தருண் கார்த்திகேயன் ஆகியோரது திருமண விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினேன்” என தெரிவித்துள்ளார். மணமக்களுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
The post இயக்குநர் சங்கரின் மகள் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.