பாலங்கள் சீரமைப்பு பணி காரணமாக மைசூரு – சென்னை விரைவு ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பாலங்கள் சீரமைப்பு பணி காரணமாக மைசூரு – சென்னை விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், பெங்களூரு கிழக்கு மற்றும் பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ரயில்வே பாலங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக மைசூரு- டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் ‘காவேரி’ தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16022) இன்று (திங்கட்கிழமை), நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் பெங்களூரு கிழக்கு, பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையங்கள் வழியாக செல்வதற்கு பதிலாக கே.எஸ்.ஆர். பெங்களூரு, யஷ்வந்தபுரம், பானசவாடி, பையப்பனஹள்ளி, கே.ஆர்.புரம் வழியாக இயக்கப்படும்.

இதேபோல் டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்-மைசூரு ‘காவேரி’ தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16021) இன்று, நாளை மற்றும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் கே.ஆர்.புரம், பையப்பனஹள்ளி, பானசவாடி, யஷ்வந்தபுரம் வழியாக கே.எஸ்.ஆர். பெங்களூரு ரயில் நிலையத்தை வந்தடையும். அதாவது பெங்களூரு கிழக்கு மற்றும் பெங்களூரு கன்டோன்மென்ட் ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக செல்லாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

The post பாலங்கள் சீரமைப்பு பணி காரணமாக மைசூரு – சென்னை விரைவு ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: