தென்சென்னை தொகுதியில் உள்ள பெண்களை தொழில்முனைவோராக மாற்றுவதே எனது முதல் கடமை: பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்குறுதி

 

சென்னை, ஏப்.15: தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாலாஜி நகர் 4வது பகுதி குனாளம்மன் கோயில் தெரு, மதியழகன் தெரு, முருகன் கோயில் தெரு, புலுதிவாக்கம் பஸ் டிப்போ சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று வீதி வீதியாக சென்று தாமரை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது:
தென்சென்னை தொகுதி தகவல் தொழில்நுட்பம் நிறைந்த தொகுதி.

நாட்டின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்களிப்பை கொடுப்பவர்கள் மென்பொருள் பொறியாளர்கள். அவர்களுக்கு டென்ஷன் இல்லாத சூழ்நிலையை உருவாக்கி கொடுக்கவேண்டும். குறிப்பாக பெண் பொறியாளர்களுக்கு தங்கும் இடம், உணவு ஆகியவை பிரச்னையாக இருக்கிறது. இதைபோக்க சோழிங்நகல்லூர், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் நவீன வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதிகள் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.

இதுபோன்று என்னற்ற திட்டங்களை தென்சென்னை தொகுதியின் வளர்ச்சிக்காக வகுத்து வைத்துள்ளேன். என்னை வெற்றி பெற செய்தால், தென்சென்னை அபரிதமான வளர்ச்சியை எட்டும் என உறுதியளிக்கிறேன். பாஜ தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாக்குறுதியின் மூலம், மாதத்திற்கு ரூ.1 லட்சம் சம்பாதிக்கும் அளவுக்கு பெண்களை தொழில் முனைவோர்களாக ஆக்குவோம் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன் படிப்படையில் தென்சென்னையில் வசிக்கும் பெண்களை தொழில் முனைவோராக ஆக்குவேன் என்பதை உறுதிபட தெரிவிக்கிறேன். எல்லா வகையிலும் நீங்கள் எப்போதெல்லாம் வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்பொழுதெல்லாம் உங்கள் சகோதரியாக ஓடோடி வந்து உங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

The post தென்சென்னை தொகுதியில் உள்ள பெண்களை தொழில்முனைவோராக மாற்றுவதே எனது முதல் கடமை: பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்குறுதி appeared first on Dinakaran.

Related Stories: