இலங்கைக்கு படகில் கடத்திய ரூ.400 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: 10 மீனவர்கள் கைது

ராமேஸ்வரம்: இலங்கையின் தென்கடலில் இரண்டு மீன்பிடி படகுகளில் ₹400 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை கடத்திய 10 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்படையினர் உளவுத்துறையின் தகவலின் பேரில், கடலோர காவல் படையுடன் இனைந்து கடந்த இரண்டு நாட்களாக தென்கடல் பகுதியில் தீவுகளையொட்டி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் தெற்கே டோண்ட்ராவில் இருந்து 133 கடல் மைல் தொலைவில் சென்ற இரண்டு மீன்பிடி படகை கடற்படையினர் நேற்று மடக்கி பிடித்தனர். படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பார்சல்களை சோதனை செய்ததில் போதைப் பொருள் என கண்டறியப்பட்டது. ஆய்வு செய்ததில் 179 கிலோ 906 கிராம் கிறிஸ்டல் மெத்தபேட்டமைன் (ஐஸ்) மற்றும் 82 கிலோ 583 கிராம் ஹெராயின் போதைப் பொருள்களை கைப்பற்றி கடத்தலில் ஈடுபட்ட மீனவர்கள் 10 பேரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட இரண்டு மீன்பிடி இழுவை படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

இந்த போதைப் பொருட்களின் மதிப்பு சுமார் ₹400 கோடியாகும். கடத்தலில் ஈடுபட்டவர்கள் வெலிகமை, இமதுவ மற்றும் காலி பகுதியை சேர்ந்த 23 முதல் 54 வயது உடையவர்கள் என்பது தெரிந்தது.

The post இலங்கைக்கு படகில் கடத்திய ரூ.400 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: 10 மீனவர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: