லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி

கொல்கத்தா : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணி 15.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 28வது லீக் போட்டியில் லக்னோ – கொல்கத்தா அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் டிகாக் ஆகியோர் களமிறங்கினர்.

டிகாக் 10 ரன்னிலும், அடுத்து வந்த தீபக் ஹூடா 8 ரன்னிலும், கேப்டன் ராகுல் 39 ரன்னிலும் அவுட் ஆகி வெளியேறினர். பின்னர் களமிறங்கிய வீரர்களும் கொல்கத்தா பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். நிலைத்து ஆடிய பூரன் 2 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் உள்பட 45 ரன்கள் குவித்தார்.

இறுதியில் லக்னோ 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்டாக் 2 விக்கெட்டுகளையும், வைபவ், சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, ரசல் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா தொடக்க வீரர்களாக நரைன், பிலிப் சால்ட் களமிறங்கினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நரைன் 6 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து களமிறங்கிய ரகுவன்சி 7 ரன்னில் அவுட் ஆனார்.

கேப்டன் ஸ்ரேயாஸ் ஐய்யருடன் கைகோர்த்த பிலிப் சால்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் கொல்கத்தா அணி 15.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றிபெற்றது.

The post லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: