மோடியை வீட்டுக்கு அனுப்ப கை சின்னத்திற்கு வாக்களியுங்கள் கார்த்தி சிதம்பரம் பேச்சு

காரைக்குடி, ஏப்.14: சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் கார்த்தி ப சிதம்பரம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

வேட்பாளர் கார்த்தி ப சிதம்பரம் வாக்குகள் சேகரித்து பேசுகையில், இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். இந்த தேர்தலில் மட்டும் மூன்றாவது முறையாக மோடி வெற்றி பெற்றுவிட்டார் என்றால் இந்தியா முழுவதும் ஒரே தேர்தல் என கூறி சர்வாதிகார போக்கில் இந்தியா சென்று விடும். அதன்பிறகு தேர்தலே இருக்காது. வெள்ளைகாரர்கள் இந்தியாவை ஆட்சி செய்தபோது எப்படி எம்.பி. எம்எல்ஏ, கவுன்சிலர்களை வைத்து ஆட்சி செய்யாமல், அதிகாரிகளை வைத்து ஆட்சி செய்தார்கள். அதுபோலத்தான் டெல்லியில் உள்ள பாஜகவும் அதிகாரிகளை வைத்து இந்தியாவை ஆட்சி செய்தவர்கள். கலெக்டர், எஸ்.பி. என அதிகாரிகளை வைத்து ஆட்சி செய்வார்கள். மக்கள் பிரதிநிதிகள் இருக்க மாட்டார்கள். அவர்களை நீங்கள் கேள்வி கேட்ட முடியாது.

மக்கள் பிரதிநிதிகளிடம் தான் கேள்வி கேட்டமுடியும். உங்களால் தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகளை கொண்டு இந்தியாவை சர்வாதிகார போக்கில் ஆட்சி செய்ய வேண்டும் என்பது தான் மோடியின் கனவு. அதனை தகர்க்க வேண்டும் என்றால் இந்த தேர்தலில் மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

இந்த தேர்தலில் மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதற்கு இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவு பெற்ற கை சின்னத்திற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு அதிக நிதி வேண்டும் என்றால் ஆட்சி மாற்றம் வர வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து நடக்க நிதி தேவை, அதற்கு இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை கேரண்டியாக வழங்கப்பட்டுள்ளது. அதில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட சம்பளம் 400 ஆக உயர்த்தப்படும். கல்வி கடன் அசல், வட்டியுடன் தள்ளுபடி செய்யப்படும் என்பது உள்பட பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்த இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரத்தில் முதலில் சீரியல் எண் ஒன்றில் இருக்கும் கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

The post மோடியை வீட்டுக்கு அனுப்ப கை சின்னத்திற்கு வாக்களியுங்கள் கார்த்தி சிதம்பரம் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: