ராயபுரத்தில் 25 ஆண்டு முடிசூடா மன்னனாக இருந்த நான் 2019ல் பாஜவுடன் கூட்டணி அமைத்ததால் தோற்றேன்: மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பீலிங்

சென்னை: ராயபுரத்தில் 25 ஆண்டுகள் முடிசூடா மன்னனாக இருந்த நான் கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் பாஜவுடன் கூட்டணி வைத்ததால் தோற்றேன் என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். வட சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

பின்னர், அவர் அளித்த பேட்டி: பாஜ மாநில தலைவர் அண்ணாமலைக்கு வாய்க்கொழுப்பு அதிகமாக உள்ளது. ஆர்கே நகரில் டோக்கன் கொடுத்து சென்ற டிடிவி தினகரனால் பிரசாரம் செய்ய முடியுமா? ஒன்றிய அரசு ஊழல் வழக்கு போட்டுவிடுவார்கள் என அஞ்சி பாஜவுடன் டிடிவி கூட்டணி வைத்துள்ளார். அதிமுக கட்சியை தனதாக்கி கொள்ளலாம் என டிடிவி, ஓபிஎஸ் நினைத்தால் இலவு காத்த கிளியின் கதையாகத்தான் முடியும். மதத்தை வைத்து அரசியல் செய்யும் பாஜவால் 5 சதவீதத்துக்கு மேல் வாக்கு வங்கியை ஏற்ற முடியாது.

10 ஆண்டுகளில் எந்த வளர்ச்சியும் இந்தியாவில் பாஜ செய்யவில்லை. தேர்தல் முடிந்தவுடன் ஒபிஎஸ் பாஜவில் இணைவார். 2019 ஆண்டு நடந்த தேர்தலில் பாஜவுடன் கூட்டணி வைத்ததால்தான் ஆட்சியை இழந்தோம். 25 ஆண்டுகள் முடி சூடா மன்னனாக ராயபுரத்தில் இருந்த நானே பாஜவால் தோற்றேன், என்றார்.

The post ராயபுரத்தில் 25 ஆண்டு முடிசூடா மன்னனாக இருந்த நான் 2019ல் பாஜவுடன் கூட்டணி அமைத்ததால் தோற்றேன்: மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பீலிங் appeared first on Dinakaran.

Related Stories: