தென்னை டானிக் செயல்முறை விளக்கம்

நாகர்கோவில், ஏப். 14 : தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் ஆதிலெட்சுமி, அபிநயா, அக்ஷயா, தர்ஷினி, ஹரிஸ்மிதா, ஹரிணி, பிரியதர்ஷினி, சுவேதா ஆகியோர் பூதப்பாண்டி அருகே உள்ள அவ்வையார் அம்மன்கோயில் அருகே விவசாயி ஐயப்பன் என்பவரது தென்னை தோப்பில் கிராமப்புற வேளாண்மை பயிற்சி பெற்றனர். அப்போது தென்னை டானிக் பற்றிய செயல்முறை விளக்கம் அளித்தனர். தென்னை டானிக் பயன்படுத்துவதால் காய்கள் பெரிதாகி பருப்பு எடைக்கூடும். குரும்பை கொட்டுதல் குறையும், பாளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். விளைச்சல் 20 சதவீதம் வரை அதிகரிக்கும் மற்றும் பூச்சி, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தென்னை டானிக்கை ஒரு லிட்டர் அடர் டானிக்கில் 4 லிட்டர் நீரில் கலந்து ஒரு மரத்திற்கு 200 மில்லி வீதம் 25 மரத்திற்கு வேர் மூலம் கொடுக்க வேண்டும். கல்லூரி முதல்வர் முனைவர் தேரடிமணி தலைமையில் பேராசிரியர்கள் காளிராஜன், ஆறுமுகம் பிள்ளை, ஷோபா மற்றும் உதவி வேளாண் இயக்குநர் சுரேஷ் ஆகியோர் மாணவர்களை ஒருங்கிணைத்து வழி நடத்தினர்.

The post தென்னை டானிக் செயல்முறை விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: