அடிப்படை வசதி கோரி கிராம மக்கள் மனு

மேலூர், ஏப். 14: மேலூர் அருகே அழகர்மலை அடிவாரத்தில் கச்சிராயன்பட்டி ஊராட்சியில் உள்ளது கே.புதூர். இங்கிருந்து வெளியிடங்களுக்கு செல்லவதற்கும், மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கும் 5 கி.மீ தூரம் நடந்து சென்றே பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது. பாதுகாப்பு காரணங்களால் மாணவிகள் பலரும் படிப்பை தொடராமல் உள்ளனர். இந்நிலையில் இக்கிராமத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் மதுரை கலெக்டர் அலுவலகம், மேலூர் ஆர்டிஓ அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்களுக்கு குடும்பத்தினருடன் சென்று கோரிக்கை மனுக்கள் அளித்தனர். அவற்றில், தங்கள் கிராமத்திற்கு அவசியமான சாலை, குடிநீர், தெருவிளக்குகள், ரேஷன் கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டும் என்று பல முறை கோரிக்கை விடுத்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ரேஷன் கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டைகளை திரும்ப ஒப்படைத்து தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

The post அடிப்படை வசதி கோரி கிராம மக்கள் மனு appeared first on Dinakaran.

Related Stories: