தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் ஏப்.22 வரை தீப்பெட்டி தொழிற்சாலைகளின் வேலைநிறுத்தம் தொடக்கம்..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் ஏப்ரல்.22 வரை தீப்பெட்டி தொழிற்சாலைகளின் வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளது. சட்டவிரோத சீன இறக்குமதி லைட்டர் விற்பனையால் வடமாநிலங்களில் தீப்பெட்டி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தீப்பெட்டி பண்டல்கள் கையிருப்பு அதிகமாக உள்ளதால் மூலப் பொருள் வாங்கியோருக்கு பணம் தர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தொழில் மிகவும் நலிவுற்று தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் . ஏற்கனவே ஜிஎஸ்டி உள்ளிட்ட காரணங்களால் தீப்பெட்டி தொழிலை நடத்த முடியாத சூழல் உள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

தீப்பெட்டி ஆலை மூடல் – ரூ.6 கோடி வருவாய் பாதிப்பு

உற்பத்தி நிறுத்தம் காரணமாக 650-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. தீப்பெட்டி தொழிலை சார்ந்த 1,000-க்கும் மேற்பட்ட சார்பு தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன. தீப்பெட்டி ஆலைகள் முடலால் கோவில்பட்டி, எட்டயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 4 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தீப்பெட்டி ஆலைகளின் வேலைநிறுத்தத்தால் தினமும் ரூ.6 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என உற்பத்தியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் ஏப்.22 வரை தீப்பெட்டி தொழிற்சாலைகளின் வேலைநிறுத்தம் தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Related Stories: