வீட்டு முன் விடையாடிய போது விபத்து: லாரி மோதி குழந்தை பலி; கும்பகோணம் அருகே பரிதாபம்

 

கும்பகோணம், ஏப்.13: தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் அருகே உள்ள தியாகசமுத்திரம் ஊராட்சி, புள்ளபூதங்குடி மெயின் ரோட்டில் வசிப்பவர் ஐயப்பன் (38). இவர் தனது வீட்டின் முன்புறம் மளிகை கடை வைத்துள்ளார். இவரது மனைவி காசியம்மாள் (33). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இவர்களது இளைய மகள் ராஜஸ்ரீ (1 1/2). நேற்று முன்தினம் இரவு ராஜஸ்ரீ வீட்டின் முன்புறம் விளையாடி கொண்டிருந்தாள்.

அப்போது கூனஞ்சேரியிலிருந்து சுவாமிமலை நோக்கி அதிவேகமாக சென்ற டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக குழந்தை ராஜஸ்ரீ மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த குழந்தை ராஜஸ்ரீ ரத்த வெள்ளத்தில் மிதந்தார். இதை பார்த்த அய்யப்பன், காசியம்மாள் கதறி அழுதபடி குழந்தையை பைக்கில் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர் குழந்தை வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டது என தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை ஐயப்பன் இது குறித்து கபிஸ்தலம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வீட்டு முன் விடையாடிய போது விபத்து: லாரி மோதி குழந்தை பலி; கும்பகோணம் அருகே பரிதாபம் appeared first on Dinakaran.

Related Stories: