மூணாறில் தேர்தல் விழிப்புணர்வு டபுள்டக்கர் பஸ் பயணம் துவக்கம்: கால்பந்து போட்டியும் நடைபெற்றது

 

மூணாறு, ஏப்.13: பிரபல சுற்றுலாத்தலமான கேரள மாநிலம் மூணாறுக்கு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் பாகமாக கேரளா அரசு பேருந்து கழகத்தின் டபுள் டக்கர் பஸ் பயணத்தை மாவட்ட ஆட்சியர் ஷீபா ஜார்ஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து 2024 லோக்சபா தேர்தலில் அனைவரும் வாக்கு அளிக்க வேண்டும், \”மைதானத்தில் இருந்து வாக்குச்சாவடிக்கு \” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியின் பாகமாக நட்புறவு கால்பந்து போட்டி நடத்தப்பட்டது.

`டஸ்கர் ஷீல்ட்’ என்ற பெயரில் தேர்தல் ஆணையம் நடத்திய கால்பந்து போட்டி பழைய மூணாறு கே.டி.எச்.பி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியை பிரபல கால்பந்து வீரர் ஐ.எம் விஜயன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் மாவட்ட காவல்துறை அணியும், கண்ணன் தேவன் ஹில்ஸ் பிளாண்டேஷன் அணியும் மோதியது. இதில் 1-0 என்ற கோல் கணக்கில் கண்ணன் தேவன் ஹில்ஸ் பிளாண்டேஷன் அணி வெற்றி பெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் ஆய்வாளர் டி.கே.விஷ்ணுபிரதீப், சப் கலெக்டர்களான அருண் நாயர், ஜெயகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். கேரளாவில் வரும் 26ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான விழிப்புணர்வின் பாகமாக இனிவரும் ஐந்து நாட்கள் பழைய மூணாறு கே.எஸ்.ஆர்.டிசி டிப்போவில் இருந்து புறப்படும் டபுள் டக்கர் பஸ் தேவிகுளம் சிக்னல் பாயிண்ட் வழியாக பயணம் செய்து கேப் ரோடு வியூ பாயிண்ட் மற்றும் ஆணையரங்கல் அணைக்கட்டில் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மூணாறில் தேர்தல் விழிப்புணர்வு டபுள்டக்கர் பஸ் பயணம் துவக்கம்: கால்பந்து போட்டியும் நடைபெற்றது appeared first on Dinakaran.

Related Stories: