பசுபதிபாளையம் பாலம் அருகே அமராவதி ஆற்றில் உயிரை பறிக்கும் சுழல்களை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்


கரூர்: அமராவதி ஆற்றில் பசுபதிபாளையம் பாலம் அருகே உயிர்களை பறிக்கும் பாறை இடுக்குகளை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் தோன்றி தாராபுரம், சின்னதாராபுரம், விஸ்வநாதபுரி, பள்ளபாளையம், ஆண்டாங்கோவில் மேற்கு, ஆண்டாங்கோவில் கிழக்கு வழியாக கரூர் மாநகராட்சி பகுதிக்கு வந்து பசுபதிபாளையம் , மேலப்பாளையம் வழியாகச் சென்று திருமக்கூடலூர் அருகே காவேரி ஆற்றில் கலக்கிறது. அமராவதி யாரும் பாயும் பகுதிளான தாராபுரம், சின்னதாராபுரம், ராஜபுரம் ஆகிய 3 பகுதிகளில் மட்டுமே பாறைகளுக்குள் புகுந்து தண்ணீர் வரும் மற்ற பகுதிகளில் பெரும்பாலும் மணல்கள் மீதும் புல் மற்றும் மரம் செடி கொடி களை தண்ணீர் பவனி வருவதுண்டு.

கரூர் பசுபாளையம் பாலம் அருகே உள்ள பாறைகளில் சுழல்கள் , புதை மணல்கள், பாறை இடுப்புகள் வழியாக தண்ணீர் அபாயகரமாக வெளிவருவதை கண்கூடாக பார்க்க முடியும். மழை காலங்களில் அடிக்கடி இதில் உயிர் சேதம் எடுப்பதுண்டு . தற்போது இன்னும் பருவமழை தொடங்காத காரணத்தால் அமராவதி ஆறு வறண்ட நிலையில் உள்ளது. இதை கருத்தில் கொண்டு பசுபதிபாளையம் பாலம் அருகே அமைந்துள்ள பாறையில் உள்ள இடுக்குகளை கான்கிரீட் மூலமா அல்லது பெரிய பாறைகளை இடுக்கு பகுதிகள் செலுத்தி சாந்து போட்டு அடைத்தால் சுழல்களில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் பசுபதிபாளையம் பாலத்தில் காலங்களில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இறப்பதுண்டு. குறிப்பாக அமராவதி ஆற்றில் வெள்ளம் வரும் பொழுது அதிக அளவு மீன் கிடைப்பதால் சிறுவர் முதல் மீனவர்களும் நேரடியாக ஆறுகளில் ஆபத்தை உணராமல் மீன்பிடிப்பதால் பாறை இடுக்குகளுக்குள் சிக்கி பரிதா உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு தற்போது மழைக்காலம் இன்னும் ஆரம்பிக்காத காரணத்தால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தனிக் கவனம் செலுத்தி பாறைகளை அப்புறப்படுத்தியோ, அல்லது பாறை இடுக்குகளில் கான்கிரீட் அமைத்து அதில் உள்ள அபாயகரமான ஓட்டைகளை அடைக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பசுபதிபாளையம் பாலம் அருகே அமராவதி ஆற்றில் உயிரை பறிக்கும் சுழல்களை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: