மக்களவைத் தேர்தல் : தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்க ஊழியர்களுக்கும் வரும் 19ம் தேதி விடுமுறை அறிவிப்பு

சென்னை : மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்க ஊழியர்களுக்கும் வரும் 19ம் தேதி விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு திரைப்படக் கண்காட்சியாளர்கள் சங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் 19.04.2024 அன்று நடைபெறும் இந்திய பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்கம் ஊழியர்களுக்கும் அன்று 19.04.2024 அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மக்களவைத் தேர்தல் : தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்க ஊழியர்களுக்கும் வரும் 19ம் தேதி விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: