அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் என்றால் என்ன?

பரிணாம வளர்ச்சி அடைந்த ஜோதிடம்

ஜோதிடம் என்பது, ஒளியை தந்து இருளை அகற்றி மனிதனை நல்வழிப்படுத்தும் கலையாக அறியப்படுகிறது. வேதத்தின் ஆறு பாகங்களில், ஜோதிடமும் ஒன்று. ஜோதிடம் ஒவ்வொரு காலகட்டத்திலும், பரிணாம வளர்ச்சி அடைந்து வருகிறது. தற்போதைய கால சூழ்நிலையில் ஜோதிடம், “ALP’’ அதாவது “அட்சய லக்ன பத்ததி’’ என்று ஒரு புதிய பரிணாம வளர்ச்சி அடைந்து இருக்கின்றது.

அட்சய லக்னம்

நாம் பிறக்கும் போதுள்ள உடலும், பிறக்கும்போது உள்ள மனமும் தற்போதைய வயதுக்கு ஏற்ப வளர்ச்சி பெறுகிறது. அப்படி, உடலும் மனமும் வளர்ச்சி பெறும் போது, ராசிக்கு தசா புத்தி கணக்கிடும்போது, ஏன் லக்னத்திற்கு கணக்கிடுவதில்லை? லக்னம் மட்டும் ஏன் நகரவில்லை? என்று யோசித்ததின் விளைவுதான் இந்த “அட்சய லக்ன பத்ததி’’ ஜோதிட முறை.
“ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி”
என்ற பட்டுக்கோட்டையாரின் பாடலுக்கு ஏற்ப, லக்னமும் ராசியும் சேர்ந்து வளரும் என்பது உண்மையாகிறது.
அட்சய லக்ன பத்ததி ஜோதிடத்தின் ஓர் விளக்கம்
“அட்சயம்’’ என்றால்
வளருதல்
“லக்னம்’’ என்றால்
தோற்றம்
“பத்ததி’’ என்றால் வரிசைப்படுத்துதல் (ஒழுங்கு
படுத்துதல்)
லக்னத்தை, வயதிற்கு ஏற்ப வரிசைப்படுத்தி பலன் கூறும் முறை, “அட்சய லக்ன பத்ததி’’ ஆகும். ஒவ்வொரு வயதின் தோற்றம் வளர்தல் எவ்வளவு சாத்தியமோ, அதே போல், வரிசையாக லக்னம் வளரும் முறையை குறிக்கும் புள்ளி அட்சய, லக்ன புள்ளியாகும். “அட்சய லக்னம்’’ என்பது லக்னப் புள்ளியில் இருந்து ஒரே சீரான வயதிற்கு ஏற்ப வளர்ச்சியை குறிப்பது. லக்னம் மற்றும் லக்ன புள்ளியில் இருந்து வளர்ச்சி பெறும் அமைப்பு அட்சய லக்னப் புள்ளி ஆகும். ஒருவருடைய முதல் சுவாசம் தொடங்கி அதிலிருந்து தோற்றம் உருவாகும் லக்னப்புள்ளி தொடர்ச்சியாக சூழ்நிலைகளை ஒத்து வாழ்வில் புதிய பரிமாணத்தை அளிக்க அட்சய லக்ன புள்ளி அமைகிறது.
“ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின்”
உரிய இடத்தில் காலம் அறிந்து கடமையாற்றும் ஒருவன், இவ்வுலகையே வெற்றி கொள்வான் என்பதற்கு இணங்க, இந்தக் காலக்கண்ணாடியை நம் வாழ்க்கையை பிரதிபலிக்கும் அற்புதமான ஏ.எல்.பி எனும் இந்த ஜோதிடத்தின் மூலம் காலம் அறிந்து நல்ல நேரத்தில் செயல்பட்டால் வெற்றி பெறலாம்.

தோற்றுவித்தவர்

இந்த அற்புதமான ஜோதிடத்தை உணர்ந்து நமக்கு உணர்த்தியவர் (ALP INVENTOR) ஐயா.திரு.S.பொதுவுடைமூர்த்தி அவர்கள். வேதங்கள் தோன்றிய வேதாரண்யேஸ்வரர் இருந்து அருள் பாலிக்கும் வேதாரண்யத்தில்,நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் தென்னாடார் நடுக்காட்டில் திரு.சி.பக்கிரிசாமி, பா.ஞானசுந்தராம்பாள் இவர்களுக்கு பேரனாகவும், திரு.பா.சிங்காரவேலர், சி.பத்மாவதி அவர்களுக்கு மகனாகவும் பிறந்தவர், திரு.சி.பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்கள்.விவசாயக்குடும்பத்தில் பிறந்து, தென்னாடார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயின்று, பின்னர் குமரன் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் கல்வி கற்று, 2006-ல் தமிழ் துறையில் இளங்கலை பட்டத்தினை அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் பெற்றார். 2009-ல் முதுகலைத்தமிழ் பட்டத்தினை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வாயிலாகப் பெற்றார். 2013-ல் சிம்ரா கல்வியியல் கல்லூரியில் தமிழ்த் துறையில் கல்வியியல் பட்டம் பெற்றார்.

முனைவர் பட்ட ஆய்வு

தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில், ஓலைச்சுவடி துறையில் ஜோதிடம் சார்ந்த ஓலைச்சுவடிகளின் பதிப்புகள் என்ற தலைப்பில் ஆய்வுகள் செய்து அதில் முனைவர் பட்டமும் பெற்றார்.

ஜோதிட முறை

திருக்கணிதம், வாக்கியம் கொண்டு பாரம்பரிய முறையில் கிருஷ்ணமூர்த்தி பத்ததி முறையிலும் பிரசன்னம், ஆருடம், நிமித்தம், சகுனம், மருத்துவ ஜோதிடம், மூலநாடி போன்ற 183 முறைகளில் ஜோதிடத்தில் ஆராய்ச்சி செய்து, தற்போது அனைவரும் பயன் பெறும் வகையில் “ஏ.எல்.பி’’ எனும் “அட்சயலக்னபத்ததி ஜோதிட’’ முறையை நமக்கெல்லாம் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்.

 

The post அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் என்றால் என்ன? appeared first on Dinakaran.

Related Stories: