வனவிலங்குகள் வேட்டையாடுவதை தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு தீவிரம்

சிவகங்கை, ஏப். 10: சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, மதகுபட்டி, காளையார்கோயில், திருப்புத்தூர், சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளில் மான், முயல், மற்றும் மயில்கள் அதிக அளவில் உள்ளது. இதனை வேட்டையாடுவதை தடுக்கும் விதமாக மாவட்ட வன அலுவலர் பிரபா உத்தரவின் பெயரில், மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

வன சரகர் பார்த்திபன் தலைமையில் ஒரு குழுவினர் சிவகங்கை அருகே நடராஜபுரம், நாட்டரசன்கோட்டை, பனகுடி, பாகனேரி உள்ளிட்ட பகுதியில் இரவு முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், மான், மயில், முயல் போன்ற வேட்டையாடினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

The post வனவிலங்குகள் வேட்டையாடுவதை தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: