நத்தம் மீனாட்சிபுரத்தில் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

நத்தம், ஏப். 10: நத்தம் மீனாட்சிபுரம் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா மார்ச் 31ம் தேதி காலை சந்தன கருப்பு சுவாமி கோயிலிலிருந்து தீர்த்தம் அழைத்தல் வருதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. ெதாடர்ந்து ஏப்.5ம் தேதி தோரண மரம் ஊன்றுதல் நிகழ்ச்சி நடந்தது. ஏப்.7ம் தேதி இரவு அம்மன் குளத்திலிருந்து கரகம் பாவித்து அம்மன் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு அரண்மனை பொங்கல், மாவிளக்கு, வாணவேடிக்கைகள் நடந்தது. நேற்று முன்தினம் காலை பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அன்னதானம் நடந்தது. அன்றிரவு ஊர் மாவிளக்கு நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை அம்மன் குளத்திலிருந்து பக்தர்கள் சந்தனக்குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து ஊர் பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டுதல் நிகழ்ச்சிக்கு பின் நேற்றிரவு ஊர் சார்பில் பக்தர்கள் முளைப்பாரி ஊர்வலம் எடுத்து வந்தனர். பின்னர் இரவு கரகம் அம்மன் குளம் சென்றடைந்தது. இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் காரணக்காரர்கள், விழா குழுவினர், மீனாட்சிபுரம் மக்கள் செய்திருந்தனர்.

The post நத்தம் மீனாட்சிபுரத்தில் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.

Related Stories: