தெலுங்கு வருடபிறப்பை ஒட்டி மதுரை மாட்டுத்தாவணி மலச்சந்தையில் பூக்களின் விலை அதிகரிப்பு..!!

மதுரை: தெலுங்கு வருடபிறப்பை ஒட்டி மதுரை மாட்டுத்தாவணி மலச்சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. உகாதி பண்டிகை நெருங்கி வருவதால், பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பண்டிகைக் கொண்டாட்டங்களுக்காக, பூக்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர்.

அந்த வகையில், மல்லிகைப்பூ நேற்று கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முல்லை மற்றும் பிச்சிப்பூ கிலோ 400 ரூபாய்க்கும், சம்பங்கி மற்றும் செவ்வந்தி 200 ரூபாய்க்கும் விறபனையாகிறது. ரம்ஜான் பணப்பிடிகையை முன்னிட்டு மேலும் பூக்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்.

சேலம் கடைவீதி பகுதியில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு ஓமலூர், காடையாம்பட்டி, வீராணம், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குண்டுமல்லி, சன்னமல்லி, சாமந்தி, அரளி உள்ளிட்ட பூக்களை விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.இதற்கிடையே கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் நேற்று சில பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. எனினும் விலையை பொருட்படுத்தாமல் மார்க்கெட்டில் பூ வாங்குவதற்காக ஏராளமானவர்கள் வந்தனர்.

இதனால் கூட்டம் அதிகமாக இருந்தது. கடந்த வாரம் கிலோ ரூ. 400க்கு விற்ற குண்டுமல்லி நேற்று ரூ.600க்கும், கிலோ ரூ.350க்கு விற்ற சன்னமல்லி ரூ. 450க்கு விற்பனை செய்யப்பட்டது. சம்பங்கி கிலோ ரூ. 200க்கும், காக்கட்டான், மலைக்காக்கட்டான் கிலோ ரூ.300க்கும், கலர் காக்கட்டான் ரூ. 200க்கும், அரளி, வெள்ளை அரளி ஆகியவை தலா ரூ.140க்கும், செவ்வரளி ரூ.240க்கும், நத்தியாவட்டம் ரூ.150க்கும் விற்பனையானது.

The post தெலுங்கு வருடபிறப்பை ஒட்டி மதுரை மாட்டுத்தாவணி மலச்சந்தையில் பூக்களின் விலை அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: