தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கோவை நாடாளுமன்ற தொகுதி பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கோவை பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை பிரச்சாரம் மேற் கொண்டார். பள்ளிபாளையம் பகுதியில் அவர் பிரச்சாரம் மேற்கொண்ட பொழுது விசைத்தறி தொழில் குறித்து அவர் பேசினார்.
அப்போது அங்கு இருந்த விசைத்தறி தொழிலாளி ஒருவர் கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருக்கிறீர்கள் உங்களால் தான் எங்கள் தொழில் நலிவடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி கேள்வி கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த பா.ஜ.கவினர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், அண்ணாமலை பேசும் இடத்தில் இருந்து பா.ஜ.கவினர் அவரை வெளியே இழுத்து வந்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
The post அண்ணாமலை பிரச்சாரத்தின் போது கேள்வி கேட்ட விசைத்தறியாளைரை பா.ஜ.க வினர் தாக்கிய வீடியோ வைரல்! appeared first on Dinakaran.