மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை

 

அரியலூர் ஏப் 6:சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி, சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையினை சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் போர் சிங் யாதவ், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிதம்பரம் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024க்கு பயன்படுத்தக்கூடிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக அனுப்பப்பட்டு அந்தந்த கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையினை சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் நேரில் பார்வையிட்டு,

வைப்பறையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திங்களின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்ததுடன், பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். மேலும், பாராளுமன்ற தேர்தல் தொடர்பான மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டு பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஆய்வின்போது சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மி ராணி, மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை appeared first on Dinakaran.

Related Stories: