ஈடி, ஐடி, சிபிஐயை தொடர்ந்து தேர்தல் ஆணையம் மூலமும் கைது செய்ய பார்க்கிறார்கள்: ஒன்றிய அரசு மீது டெல்லி அமைச்சர் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஈடி, ஐடி, சிபிஐயை தொடர்ந்து தேர்தல் ஆணையம் மூலமும் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒன்றிய அரசு முயற்சிப்பதாக டெல்லி அமைச்சர் அடிசி தெரிவித்தார். டெல்லி மதுபான வழக்கில் என்னையும், அமைச்சர் சவுரப் பரத்வாஜ்,எம்எல்ஏ துர்கேஷ் பதக் ஆகியோரை கைது செய்ய அமலாக்கத்துறை கைது செய்ய திட்டமிட்டுள்ளது. பாஜவில் சேர வேண்டும், இல்லாவிட்டால் ஒரு மாதத்திற்குள் கைது செய்யப்படுவீர்கள் என ஒன்றிய பாஜ அரசு மிரட்டல் விடுத்ததாக ஆம் ஆத்மி மூத்த தலைவரும் டெல்லி அமைச்சருமான அடிசி பரபரப்பு குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து தேர்தல் ஆணையத்தில் பாஜ புகார் அளித்ததை தொடர்ந்து அவரிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அடிசி நேற்று கூறுகையில்,‘‘தேர்தல் ஆணையம் பா.ஜவின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுகிறது. அதே போல் வெறும் சந்தேகத்தின் அடிப்படையில், ஆம் ஆத்மி தலைவர்கள் சஞ்சய் சிங், மனிஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மியின் தேசிய அமைப்பாளர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

சட்ட விரோத பண பரிவர்த்தனை குற்றச்சாட்டுகள் எதுவும் கண்டறியப்படாத நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்ட விரோத பண பரிவர்த்தனை குற்றச்சாட்டுக்கு உள்ளான பாஜ தலைவர்கள் மீது அமலாக்கத்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. சிபிஐ, அமலாக்கத்துறையை தொடர்ந்து ஆம் ஆத்மி தலைவர்களை குறி வைத்து அவர்களை கைது செய்ய தேர்தல் ஆணையம் முயல்கிறது. ஆம்ஆத்மியுடனான தேர்தல் மோதலில் இந்த அமைப்புகளை பின்னால் இருந்து பயன்படுத்துவதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்’’ என்றார்.

The post ஈடி, ஐடி, சிபிஐயை தொடர்ந்து தேர்தல் ஆணையம் மூலமும் கைது செய்ய பார்க்கிறார்கள்: ஒன்றிய அரசு மீது டெல்லி அமைச்சர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: