கம்யூனிஸ்ட் கட்சி அங்க ஒரு மாதிரி; இங்க ஒரு மாதிரி: ஸ்மிருதி இரானி குழப்பம்

வடசென்னை தொகுதியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து, ஓட்டேரி, நம்மாழ்வார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒன்றிய இணை அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: பாஜ ஆட்சியில் பிரதமர் மோடி 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சிக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். அதனால் அவர் மீண்டும் ஆட்சி அமைக்க உறுதுணையாக இருங்கள். இந்தியாவே வேண்டும் மோடி, மீண்டும் மோடி என்று கூறி வருகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி பிரதமர் வேட்பாளர் மோடி என அறிவித்து தேர்தலை சந்திக்கிறது. ஆனால், இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என தெரியாமல் தேர்தலை எதிர்கொண்டுள்ளனர். வயநாட்டிற்கு பிரசாரத்திற்கு சென்றிருந்தேன். அங்கே காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி ஒரு மாதிரியாகவும், தமிழகத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி ஒரு மாதிரியாகவும் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

The post கம்யூனிஸ்ட் கட்சி அங்க ஒரு மாதிரி; இங்க ஒரு மாதிரி: ஸ்மிருதி இரானி குழப்பம் appeared first on Dinakaran.

Related Stories: