பாஜ, அதிமுக ஸ்டிக்கர் கட்சிகள் தேர்தலுக்கு பிறகு ஒட்டிக்கொள்ளும்: கனிமொழி எம்பி ‘டோஸ்’

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி எம்பி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிவஞானபுரத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், ‘திமுக அரசின் திட்டங்களை பாஜவும், அதிமுகவும் தங்களது திட்டங்கள் என்று கூறி ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு பொய் பிரசாரம் செய்து வருகின்றன. பாஜ பெரிய ஸ்டிக்கர் கட்சி, அதிமுக சிறிய ஸ்டிக்கர் கட்சி, இந்த இரு ஸ்டிக்கர் காட்சிகளும் தேர்தல் முடிந்த பிறகு ஒட்டிக் கொள்ளும். மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசு, தமிழகத்திற்கு எந்த நிதியும் வழங்குவதில்லை. மாறாக ஜிஎஸ்டி என்ற பெயரில் வரிகளை மட்டும் வாங்கிக் கொள்கிறது.

பாஜ ஆட்சி காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு, காஸ் விலை இரு மடங்கு அதிகரித்து விட்டது. தமிழகம் உயர்கல்வியில் முதலிடத்தில் உள்ளது. புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஏழை மக்களின் கல்வியை பாஜ அரசு பிடுங்க நினைக்கிறது. நீட் தேர்வை போன்று அனைத்து கல்லூரிகளிலும் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு கொண்டு வருவதற்கு பாஜ அரசு முயற்சிக்கிறது. இந்தியாவில் உள்ள அருணாசல பிரதேச மாநிலத்தை சீன அரசு ஆக்கிரமிப்பு செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் எந்த நடவடிக்கை எடுக்காமலும் பாஜ நாட்டின் மீது பற்றின்றி உள்ளது. நாட்டு பற்றற்ற ஒன்றிய பாஜ அரசை மக்கள் தூக்கி வீசுவார்கள்,’என்றார்.

The post பாஜ, அதிமுக ஸ்டிக்கர் கட்சிகள் தேர்தலுக்கு பிறகு ஒட்டிக்கொள்ளும்: கனிமொழி எம்பி ‘டோஸ்’ appeared first on Dinakaran.

Related Stories: