மக்களவைத் தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கம்பூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு

சென்னை: மக்களவைத் தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கம்பூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டார். சென்னை தியாகராயர் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்பூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டார்.

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந் தேதி எண்ணப்பட உள்ளன. இதையொட்டி, தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளன. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. இந்நிலையில், மக்களவை தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், மக்களவை தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கம்பூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டனர்.

மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வலியுத்தப்படும். மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். கடந்த 10 ஆண்டு கால பாஜ ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட ஜனநாயக விரோத மசோதாக்களை ரத்து செய்ய குரல் கொடுப்போம். கடந்த 10 ஆண்டுகளில் அம்பானி, அதானிக்கு தாரை வாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் மீட்கப்படும். தமிழ்மொழி, தமிழ் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு உரிய நிதியை வழங்க வலியுத்தப்படும்.

அகில இந்திய அளவிலான போட்டி தேர்வுகளை தாய் மொழியில் எழுத நடவடிக்கை எடுக்கப்படும். உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வலியுத்துவோம். தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேசிய பாதுகாப்புச்சட்டம், உபா சட்டம் உள்ளிட்டவற்றை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்த பின் சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

 

The post மக்களவைத் தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கம்பூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: