வெயிலில் தொண்டர்களை நிற்க வைத்து சொகுசு ஏசி வேனில் சீமான் பிரசாரம்

திருவொற்றியூர்: நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் கடும் வெயிலில் காத்திருந்த நிலையில், சீமான் தாமதமாக சொகுசு ஏசி காரில் வந்து, ஏசி வேனில் பிரசாரம் செய்து சென்றது சலசலப்பை ஏற்படுத்தியது. தண்டையார்பேட்டை வஉசி நகரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அமுதினியை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று காலை 10 மணி அளவில் பிரசாரம் செயய உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்பேரில் தொண்டர்கள் பெருமளவில் வந்தனர்.

ஆனால் 11.30 மணிக்கு வந்த சீமான், காரில் இருந்து நடந்து செல்லாமல், நேராக பிரசார வேனுக்கு சென்றார். வெயில் அதிகம் இருப்பதால் அவர் வருவதற்கு முன்பே பிரசார வேன் வரவழைக்கப்பட்டு, ஏசியை போட்டு குளுகுளு என வைத்து இருந்தனர். அதில், பிரசாரம் செய்த சீமான், பின்னர் வேனில் இருந்து இறங்கி மீண்டும் அப்படியே காரில் ஏறி சென்றார். வெயில் தாங்காமல் தொண்டர்கள் கடும் அவதிக்கு உள்ளான நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மட்டும் குளு குளு ஏசியில் பிரசாரம் செய்துவிட்டு சென்றது சலசலப்பை ஏற்படுத்தியது.

The post வெயிலில் தொண்டர்களை நிற்க வைத்து சொகுசு ஏசி வேனில் சீமான் பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: