அன்னாசிப்பழ அழகுக் குறிப்புகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த அன்னாசிப்பழம் உடலுக்கு சத்துகளை வழங்குவது போன்றே, சரும பாதுகாப்புக்கும் பெரிதும் உதவுகிறது. அவற்றை பார்ப்போம்.
சிலருக்கு வயதாவதால் முகத்தில் சுருக்கம் விழ ஆரம்பிக்கும். இதற்கு 2 தேக்கரண்டி தேங்காய்ப்பாலுடன், ஒரு தேக்கரண்டி அன்னாசிப் பழச்சாறு கலந்து ஒருநாள்விட்டு ஒருநாள் முகத்தில் பூசி கழுவி வர, அறுபதிலும் இளமையாய் இருக்கலாம்.தலைமுடியை பாதுகாப்பதுடன் கண்டிஷனராகவும் செயல்படுகிறது. அன்னாசிப்பழ விழுது அரைகப் தேங்காய்ப்பால் இரண்டு தேக்கரண்டி வெந்தயபவுடர் இரண்டு தேக்கரண்டி கலந்து தலையில் தேய்த்து வந்தால், பளபளப்பு கூடுவதுடன் கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

முகத்தில் எண்ணெய் வடிந்து அழகு குறைந்து தெரிகிறதா? வாரத்தில் இரண்டு நாள் ஒரு தேக்கரண்டி அன்னாசிப்பழச் சாறுடன் ஒரு தேக்கரண்டி கடலைமாவை கலந்து முகத்தில் பூசி, ஐந்து நிமிடம் கழித்து கழுவி வர, எண்ணெய்ப்பசை நீங்கி, முகம் பொலிவுறும்.கழுத்துப் பகுதியில் ஏற்படும் சுருக்கத்தைப் போக்கும் வல்லமையும் அன்னாசிக்கு உண்டு. இரண்டு அன்னாசிப்பழ துண்டுகளுடன், ஒரு முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து, ஒரு தேக்கரண்டி தேன் கலந்து நன்கு அடிக்கவும்.

இந்த விழுதை கழுத்துப் பகுதியில் மேலிருந்து கீழாகப் பூசி பத்து நிமிடம் கழித்து கழுவி விடவும். இவ்வாறு செய்ய சுருக்கங்கள் மறைந்து, கழுத்து சங்கு போல் மின்னும்.கூந்தல் வெடிப்பைப் போக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. இரண்டு தேக்கரண்டி பயத்தமாவு, தயிர் எடுத்து கலந்து கொண்டு தலையில் தடவி எக் ஷாம்பூ அல்லது புரோட்டீன் ஷாம்பூ தேய்த்து குளித்து வர, கூந்தல் நுனி வெடிப்பு மாறி, கூந்தல் பளபளப்பாகும்.

வறண்ட உதடுகளுக்கு அன்னாசிப் பழச்சாறு, பீட்ரூட் சாறு இரண்டையும் தலா ஒரு தேக்கரண்டி எடுத்து இதனுடன் ஐந்து துளிகள் எலுமிச்சைச் சாறு கலந்து பாட்டிலில் ஊற்றி ஃபிரிட்ஜில் வைத்துக் கொண்டு அவ்வப்போது பஞ்சால் ஒற்றி உதடுகளில் தடவி வர, வெடிப்பு, எரிச்சல் மறைவதுடன் இதழ்களும் ஈரப்பதத்துடன் பளபளக்கும்.

தொகுப்பு: மகாலட்சுமி சுப்ரமணியன்

The post அன்னாசிப்பழ அழகுக் குறிப்புகள்! appeared first on Dinakaran.

Related Stories: