திமுக வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து பிரசாரம் கிராமப்புற பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வேலைவாய்ப்பு வழங்கப்படும்

*அமைச்சர் கே.என்.நேரு வாக்குறுதி

திருச்சி மாவட்டம் சமயபுரம் நெம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் உள்ள கிராமப்புற பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வேலை வாய்ப்பு கொடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு வாக்குறுதி அளித்தார்.பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அருண்நேரு நேற்று காலை மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட நெ.1 டோல்கேட், பீரங்கி மேடு, உத்தமர் கோவில், சமயபுரம் கடைவீதி, சமயபுரம் நால்ரோடு, மண்ணச்சநல்லூர் கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

மண்ணச்சநல்லூர் நெம்பர் 1 டோல்கேட் ரவுண்டான பகுதியில், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அவர் பொதுமக்களிடம் கூறுகையில்.

நெம்பர் ஒன் டோல்கேட் பகுதி மிகவும் வளர்ச்சி அடையக்கூடிய பகுதியாக உள்ளது. இப்பகுதி பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கக்கூடிய பல்வேறு திட்டங்கள் இந்த பகுதிகளுக்கு வரும். கிராமத்திலிருந்து நகரத்திற்கு வரும்போது அவர்களது ஊதியமும் உயரும்.நல்ல ஒன்றிய அரசு வர இருக்கிறது. இதுவரை நாம் கொடுக்கின்ற பணத்தை எந்தவித வளர்ச்சிக்கும் மத்திய ஒன்றிய அரசு தருவதில்லை. ஆனால் மோடி வாரந்தோறும் மாதந்தோறும் தமிழகத்திற்கு வந்து எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என சொல்லுகிறார். நாம் ஒரு ரூபாய் கட்டினால் மற்ற மாநிலங்களுக்கு 3 ரூபாய், 3 ரூபாய் என தருபவர் தமிழகத்திற்கு 29 பைசா தான் தருகிறார்.

எந்த வளர்ச்சி திட்டங்களுக்கும் பணம் தரவில்லை. வெள்ளம் வந்த பொழுது மக்களுக்கு நிவாரண உதவி தரவில்லை, அப்படிப்பட்ட ஒரு ஆட்சியை அகற்றிவிட்டு, இந்தியா கூட்டணி ஆட்சி அமையப்போகிற ஆட்சி என்று சொன்னால் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியாக இருக்கும். எனவே இந்த திட்டங்களை செயல்படுத்த நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். உங்களின் தேவைகளை நிறைவேற்றவும், நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க திமுக வேட்பாளர் அருண்நேருவிற்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.அதனை தொடர்ந்து சமயபுரம் நால்ரோடு, கடைவீதி பகுதிகளில் அருண்நேரு பேசுகையில்,சமயபுரம் பகுதியில் விளையாட்டு மைதானம், சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு நடைபயணம் வரும் பக்தர்கள் வசதிக்காக நெ.1 டோல்கேட்டிலிருந்து கோயிலுக்கு நடைபாதை வசதி செய்து தரப்படும். பெண்களுக்கு மகளிர் சுய உதவி குழு கடன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய அனைத்தும் நிறைவேற்றுவேன். பாராளுமன்றத்தில் உங்களுக்காக குரல் கொடுக்க வரும் 19ம் தேதி நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற உதயசூரியன் சின்னத்தில் வாக்கு அளியுங்கள் என தீவிர வாக்கு சேகரித்தார்.

பிரசாரத்தில் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், ஊராட்சி மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சிகளான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், மதிமுக நிர்வாகிகள், விசிக நிர்வாகள், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள், சிபிஎம் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post திமுக வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து பிரசாரம் கிராமப்புற பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வேலைவாய்ப்பு வழங்கப்படும் appeared first on Dinakaran.

Related Stories: