நெல்லை மாவட்ட திமுக அலுவலகத்தில் ஐடி ரெய்டு

நெல்லை மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகிறார். நெல்லை கிழக்கு மாவட்ட திமுக அலுவலகம், பாளையங்கோட்டை மகாராஜநகரில் அமைந்துள்ளது. அங்கு நேற்று மாலை 9 பேர் கொண்ட குழு வருமான வரித்துறை அதிகாரிகள் வந்து திடீர் சோதனை நடத்தினர். மாவட்ட செயலாளர் ஆவுடையப்பனிடம் விசாரணை நடத்தினர். சுமார் 3 மணி நேர சோதனைக்கு பின்னர் வருமான வரித்துறையினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அப்போது அங்கு திரண்ட கட்சியினர் ஒன்றிய அரசிற்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.

The post நெல்லை மாவட்ட திமுக அலுவலகத்தில் ஐடி ரெய்டு appeared first on Dinakaran.

Related Stories: