‘அவரு நான் இல்லை…’தலைவரை தெரியாத தொண்டர்கள்

தூத்துக்குடி தொகுதி தமாகா வேட்பாளர் எஸ்டிஆர் விஜயசீலனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், திருச்செந்தூரில் பிரசாரம் செய்தார். அவரை வரவேற்க பாஜவினர் கைகளில் கொடியுடன் மேலரதவீதி – தெற்குரதவீதி சந்திப்பில் காத்திருந்தனர். அப்போது கட்சி நிர்வாகிகள், பெண் தொண்டர்கள் கைகளில் பூக்களை கொடுத்து ஜி.கே.வாசன் வந்தவுடன் வரவேற்கும் வகையில் பூக்களை தூவுமாறு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாஜ மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருகன் ஆதித்தன், அப்பகுதிக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அவர்தான் ஜி.கே.வாசன் என்று நினைத்து தொண்டர்கள் கையில் வைத்திருந்த பூக்களை எல்லாம் அவர் மீது தூவினர். அவர் நான் இல்லை… நான் இல்லை… என்று கையசைத்த போது பிரசாரம் தான் செய்கிறார் என்று நினைத்து பூக்கள் முழுவதையும் தொண்டர்கள் அவர் மீது தூவினர்.

The post ‘அவரு நான் இல்லை…’தலைவரை தெரியாத தொண்டர்கள் appeared first on Dinakaran.

Related Stories: