ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய குத்துச்சண்டை வீரர்களுக்கு துருக்கியில் பயிற்சி..!!

புதுடெல்லி: ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய குத்துச்சண்டை வீரர்கள் துருக்கியில் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். ஒலிம்பிக் நிகழ்வுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், விளையாட்டு அமைச்சகம், மிஷன் ஒலிம்பிக் செல் (MOC), 129 வது கூட்டம் நடைபெற்றது. பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு செல்லும் குத்துச்சண்டை வீரர்கள் துருக்கியில் பயிற்சி பெறுவதற்கான முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. MYAS, Target Olympic Podium Scheme (TOPS) நிதியுதவியின் கீழ், இந்திய குத்துச்சண்டை வீரர்களான நிகாத் ஜரீன், பிரீத்தி பவார், பிரவீன் ஹூடா, லாவ்லினா போர்கஹெய்ன் ஆகியோர் துருக்கியில் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

ஒலிம்பிக் போட்டி தொடங்க சில மாதங்களே உள்ள நிலையில் இந்திய வீரர்கள் பதக்கம் வெல்ல தீவிர பயிற்சியில் ஈடுபட உள்ளனர். குத்துச்சண்டை வீரர்களைத் தவிர, வரவிருக்கும் பாரிஸ் ஒலிம்பிக் தகுதிச் சுற்றுகள் மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளுக்குத் தயாராகும் ஐந்து டாப்ஸ் மல்யுத்த வீரர்களுக்கான வெளிநாட்டுப் பயிற்சி முகாம்களுக்கும் MOC ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், மல்யுத்த வீரர்களான சுஜீத் (65 கிலோ), தீபக் புனியா (86 கிலோ) மற்றும் நவீன் (74 கிலோ) ஆகியோர் தங்கள் ஸ்பாரிங் பார்ட்னர்கள், பயிற்சியாளர் மற்றும் பிசியோதெரபிஸ்ட்களுடன் ஏப்ரல் மாதம் ஆசிய ஒலிம்பிக் தகுதிப் போட்டிக்கு முன்னதாக பயிற்சி பெற ரஷ்யா செல்லவுள்ளனர்.

 

The post ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய குத்துச்சண்டை வீரர்களுக்கு துருக்கியில் பயிற்சி..!! appeared first on Dinakaran.

Related Stories: