சசிகலா காலில் விழுந்ததை பெருமையாக பேசுகிறார்; உலகத்திலேயே சூடு சொரணை இல்லாத எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து, திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை தீவிர பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியா கூட்டணி வெற்றி ஒரு வெற்றி கூட்டணி. வரும் லோக்சபா தேர்தலில் முதல் பட்டனை அழுத்தி வைக்கிற ஓட்டு, மோடிக்கு வைக்கிற வேட்டு. எதிர்கட்சி தலைவர் பழனிசாமி பிரதமர் மோடியை எதிர்க்க பயப்படுகிறார். 10 வருட மோடி ஆட்சியில் வாழ்வது ஒரே குடும்பம் அதானி குடும்பம் மட்டும்தான். ஒன்பது வருடத்தில் அதானி கம்பெனி மட்டும் ஆயிரம் மடங்கு வளர்ச்சி. அதானி கையில் அனைத்தையும் தூக்கிக் கொடுத்தது தான் மோடி செய்த சாதனை.

மக்களுடைய ஆதரவு பெற்று முதலமைச்சர் ஆனவர் நம்முடைய தலைவர் கலைஞர். யார் காலிலாவது விழுந்தாரா? டேபிள் புகுந்தாரா? தவழ்ந்து போனாரா? உலகத்திலேயே சூடு சொரணை இல்லாத எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி முதலமைச்சரானது இப்படித்தான். பாதம் தாங்கி பழனிச்சாமி இப்படித்தான் முதலமைச்சரானார். இரண்டு நாளா தற்போது எடப்பாடி பழனிச்சாமி பெருமையாக பேசி வருகிறார். அந்த அம்மா காலில் விழுந்து தான், தவழ்ந்து தான் போய் அமைச்சரானேன். இப்போ போய் அந்த அம்மா காலில் விழுந்தால் எட்டி உதைத்து விடுவார். உதயநிதிக்கு எப்போ பார்த்தாலும் வேற வேலையே இல்லை, எப்ப பார்த்தாலும் கல்லை மட்டும் தான் காட்டுவார் என்கிறார். நீங்கள் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கும் வரை நான் காட்டிக் கொண்டுதான் இருப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

 

The post சசிகலா காலில் விழுந்ததை பெருமையாக பேசுகிறார்; உலகத்திலேயே சூடு சொரணை இல்லாத எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: