ஐயங்கார்குளம் பள்ளி அருகே அதிமுக பிரசாரத்தால் பள்ளி தேர்வு எழுதும் மாணவர்கள் அவதி

காஞ்சிபுரம்: ஐயங்கார்குளம் பள்ளி அருகே 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற 19ம்தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட துவங்கியுள்ளனர். அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சோமசுந்தரம் தலைமையில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜசேகர், நேற்று காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்குகளை சேகரித்தார்.

காஞ்சிபுரம் அருகே உள்ள களக்காட்டூர், குருவிமலை, பலத்தோட்டம், ஐயங்கார் குளம், கோளிவாக்கம், ஆசூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர பிரசாரம் செய்தார். அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, ஐயங்கார் குளம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, மாணவ – மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத காத்திருந்தனர். சரியாக காலையில் தேர்வு எழுத ஆயத்தமானார்கள். அப்போது, அதிமுகவினர் கோளிவாக்கம் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டதால், அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாணவ – மாணவிகள் அருகிலுள்ள பள்ளிக்கு வர வரமுடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர்.

தேர்வு தொடங்கும் நேரத்தில், முன்னாள் அமைச்சர் வளர்மதி பிரசாரத்தில் ஈடுபட்டபோது, மைக் சத்தத்தால் மாணவ – மாணவிகளுக்கு தொந்தரவாக இருந்தது. மேலும் திறந்தவெளி வாகனத்தில் வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டதால், ஒரே சத்தமாக இருந்தால் மாணவ – மாணவிகள், பெற்றோர் என முகம் சுழித்துக்கொண்டு சென்றனர். பின்னர் பிரசார வேன் அங்கிருந்து நகர்ந்தது. மேலும், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை தவறு செய்பவர்களை பிடித்து விசாரித்தால், கஞ்சா போதையில் செய்துவிட்டேன் என்று கூறுகிறார்கள். ஆயிரம் ரூபாயை கூட பெண்கள் அவர்கள் தேவைக்கு பயன்படுத்த முடியவில்லை. அதை ஆண்கள் பிடுங்கிக் கொண்டு சென்று 500 ரூபாய் சரக்கும், 500 ரூபாயை முட்டை, சிக்கன் ஆகியவற்றை சைட்டிஷ்ஷாக வாங்கி கொள்கிறார்கள் என்றார்.

The post ஐயங்கார்குளம் பள்ளி அருகே அதிமுக பிரசாரத்தால் பள்ளி தேர்வு எழுதும் மாணவர்கள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: