வடசென்னை தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை; தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து வாக்குசேகரிப்பு..!!

சென்னை: வடசென்னை தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். வடசென்னை தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொகுதியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். வட சென்னை தொகுதியில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை விளக்கி அமைச்சர் உதயநிதி பிரசாரம் செய்து வருகிறார். பின்னர் மக்கள் மத்தியில் பேசிய உதயநிதி பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்தார். அவை,

*அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கலாநிதி வீராசாமியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்

* கலாநிதி வீராசாமியை எதிர்த்து போட்டியிடுபவர்களை டெபாசிட் இழக்கச் செய்யவேண்டும்

* வடசென்னை வளர்ச்சித் திட்டங்களுக்காக அதிக நிதி ஒதுக்கீடு

*அனிதா அச்சீவர்ஸ் அகாடமி மூலம் தையல், கணினி பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது

* கொளத்தூர் தொகுதியில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்

* எண்ணூர் கொசஸ்தலை முகத்துவாரத்தில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டு வருகிறது

* விம்கோ நகர் – எண்ணூர் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படும்

* வட சென்னை அனல் மின் நிலையத்தில் ரூ.6,300 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

* வடசென்னையில் பிரத்யேகமாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அமைக்கப்படும்

* பட்டா பிரச்சினையை தீர்ப்பதற்காக அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது

* தேர்தல் முடிந்ததும் வீட்டுமனை பெற்றவர்களுக்கு பட்டா வழங்கப்படும்

* சட்டப்பேரவை தேர்தலில், ஒட்டுமொத்த சென்னையும், திமுகவுக்கு வாக்களித்தது

* கருணாநிதியை போலவே, சொன்னதை தான் செய்வார், செய்வதை தான் சொல்வார் முதல்வர் ஸ்டாலின்

* வட சென்னை கணேசபுரத்தில் ரயில்வே மேம்பால பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

The post வடசென்னை தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை; தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து வாக்குசேகரிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: