வீட்டிற்கு வரும் குழுவிடம் தபால் வாக்கு பெறலாம்

சேலம், ஏப். 2:மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான டாக்டர் பிருந்தாதேவி கூறியிருப்பதாவது:சேலம் மக்களவை தொகுதியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அனுமதியின் பேரில் நாளை, நாளை மறுநாள் மற்றும் 5ம் தேதி ஆகிய மூன்று நாட்கள் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிக்க இயலாத 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்களில் படிவம் 12 டி விருப்ப விண்ணப்பம் அளித்துள்ள நபர்களின் வீட்டிற்கே சென்று தபால் வாக்கு பதிவு செய்திட சம்பந்தப்பட்ட சட்ட மன்ற தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் அலுவலர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் 3,4 மற்றும் 5ம் தேதிகளில் 12 டி விண்ணப்பம் அளித்துள்ள 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தங்கள் 12 டி விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள முகவரியில் ஆஜரில் இருக்குமாறும், உங்கள் வீட்டிற்கு வருகை தரும் குழுவினரிடம் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள அடையான ஆவணங்களில் ஏதேனும் ஒரு அடையாள ஆவணத்தை காண்பித்து தபால் வாக்கினை பெற்று சுதந்திரமாக எவருடைய வற்புறுத்தலுமின்றி வாக்கினை பதிவு செய்து அதற்குரிய கவரில் (படிவம் 13 பி) வைத்து ஒட்டி படிவம் 13 ஏ, கையொப்பம் செய்து படிவம் 13 சி வைத்து வாக்குப் பெட்டியில் செலுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது. படிவம் 12 டி விருப்ப விண்ணப்பம் அளித்துள்ள அனைவரும் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்தி தேர்தல் கடமையை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

The post வீட்டிற்கு வரும் குழுவிடம் தபால் வாக்கு பெறலாம் appeared first on Dinakaran.

Related Stories: