பாஜ கூட்டணி பிம்பிளிக்கி பிலாபி: நடிகை விந்தியா கிண்டல்

மதுரை: மதுரையில் நேற்று அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து செல்லூர், முனிச்சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடிகை விந்தியா பிரசாரம் செய்தார். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது நடிகை விந்தியா பேசியதாவது: பாஜ கூட்டணி ஒரு சூப்பர் காமெடி. ஒரு சினிமாவுல ஆர்.சுந்தர்ராஜன் ஜெயிலுக்குப் போவார். அங்கே 3 பேரை கைது பண்ணி வச்சிருப்பாங்க. ஏன் உள்ளே வந்தீங்கன்னு கேட்பாரு. வரதராஜனை கொலை செய்ய முயற்சி பண்ணேன்னு ஒருத்தரும், வரதராஜனை காப்பாத்த நினைச்சேன்னு இன்னொருத்தரும் சொல்வாங்க. 3வது நபர் நான்தான் வரதராஜன் என்னையும் உள்ளே தூக்கிப் போட்டுட்டாங்கன்னு சொல்வார். இப்படித்தான் ஏன் சேர்ந்திருக்கோம், எதுக்குன்னு தெரியாமலே ஒரு கூட்டணி. அதுதான் பாஜ கூட்டணி. ஜிகே வாசன், அன்புமணி, ஜான் பாண்டியன், சரத்குமார், பச்சமுத்து, சுயேட்சைகள்னு இவங்கள் எல்லாம் மோடியுடன் மேடையில் ஒன்றாக நிற்கும்போது, பாண்டியராஜன் படம் பார்த்த மாதிரிதான் இருக்கு. பிம்பிளிக்கி பிலாபிதான் ஞாபகத்துக்கு வருது. தேர்தலுக்கு அப்புறம் என்ன ஆகப்போறாங்கன்னு தெரியல.  இவ்வாறு பேசினார்.

The post பாஜ கூட்டணி பிம்பிளிக்கி பிலாபி: நடிகை விந்தியா கிண்டல் appeared first on Dinakaran.

Related Stories: