15 மாதங்கள் சிறை தண்டனை பெற்ற மாஜி அதிபர் ஜேக்கப் ஸூமா தென்ஆப்பிரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட தடை

ஜோகனஸ்பர்க்: தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் ஸூமா தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தென்னாப்பிரிக்க அதிபர் தேர்தல் மே 29ம் தேதி நடைபெற உள்ளது. தென்னாப்பிரிக்க அதிபராக கடந்த 2009-2018 ஆட்சி செய்த ஜேக்கப் ஸூமா ஊழல் குற்றச்சாட்டுகள்தொடர்பாக 2021ல் கைது செய்யப்பட்டார். அவருக்கு 15 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் மருத்துவ பரோலில் விடுவிக்கப்பட்ட ஜேக்கப் வீட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அதிபர் தேர்தலில் போட்டியிட அவர் மீண்டும் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் தென்னாப்பிரிக்க அரசியலமைப்பு சட்டப்படி, 12 மாதங்களுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நபர் தேர்தலில் போட்டியிட முடியாது. அதனால் அவரது மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது.

The post 15 மாதங்கள் சிறை தண்டனை பெற்ற மாஜி அதிபர் ஜேக்கப் ஸூமா தென்ஆப்பிரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட தடை appeared first on Dinakaran.

Related Stories: