மகளிர் குழுக்களுக்கு தொழில் வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு

 

பந்தலூர், மார்ச் 29: பந்தலூர் அருகே அம்மன்காவு அரசு ஆரம்ப பள்ளி வளாகத்தில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், ஆல் தி சில்ரன் அமைப்பு, சோலிடரிடட் நிறுவனம் ஆகியன சார்பில் மகளிர் குழுக்களை சேர்ந்த மகளிர்களுக்கு சுய தொழில் மேற்கொள்ளுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்ரமணியம் தலைமை தாங்கினார். ஆல்திசில்ரன் அமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், ஏகம் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சோலிடரிடட் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் மகளிர் மேம்பாட்டிற்கு எளிய முறையில் கிராம பகுதிகளை சார்ந்த பல்வேறு தொழில்கள், அவற்றை மேற்கொள்ளும் விதங்கள், குழுவாக செய்யும் தொழில்கள், பொருட்களின் விற்பனை வாய்ப்புகள், அரசு திட்டங்கள் மற்றும் நிறுவனங்கள் அளிக்கும் உதவிகள் குறித்து விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில் பங்தபிலா அம்மன்காவு, குன்றில்கடவு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மகளிர் குழுவை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post மகளிர் குழுக்களுக்கு தொழில் வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: