எருமப்பட்டி பேரூராட்சியில் அக்னி மாரியம்மன் கோயில் திருவிழா ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து வழிபாடு

சேந்தமங்கலம், மார்ச் 29: எருமப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட அய்யர் மேடு பகுதியில் அக்னி மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாத திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 15 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள், திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மேலும் சக்தி அழைத்தல், மாவிளக்கு பூஜை, பொங்கல் வைத்து வழிபாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் திருவிழா நேற்று நடந்தது. கோயிலின் முன்பு அக்னி குண்டம் அமைக்கப்பட்டது. இதில் எருமப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக பூசாரி பூர்கரகத்துடன் தீயில் இறங்கி நடந்து வந்த பின், பக்தர்கள் குழந்தைகளுடன் தீமிதித்தனர். எருமப்பட்டி போலீஸ் எஸ்ஐ வெற்றிவேல் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

The post எருமப்பட்டி பேரூராட்சியில் அக்னி மாரியம்மன் கோயில் திருவிழா ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: