காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சித்தாமூர் ஒன்றியத்தில் சிப்காட் அமைத்து தருவேன்: திமுக வேட்பாளர் செல்வம் உறுதி

மதுராந்தகம்: காஞ்சிபுரம் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட ‘சித்தாமூர் ஒன்றியத்தில் சிப்காட் அமைத்து படித்து முடித்த இளைஞர்கள், பெண்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித்தருவேன்’ என்று திமுக வேட்பாளர் செல்வம் உறுதியளித்தார். காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் செல்வம், கடந்த திங்கட்கிழமை அன்று காஞ்சிபுரம் கலெக்டரிடம் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவானது பரிசிலனை செய்யப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்நிலையில், செய்யூர் தாலுகா சித்தாமூர் ஒன்றியத்தில் நேற்று பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, பொதுமக்களிடையே திமுக வேட்பாளர் செல்வம் பேசுகையில், ‘சித்தாமூர் ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு புத்தகங்கள், இருக்கை மற்றும் மேஜைகள், நியாய விலை கடை கட்டிடங்கள், சாலைகள், பள்ளி கட்டிடங்கள், உள்ளிட்ட பணிகளை காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் சிறப்பாக செய்து முடித்துள்ளேன். இதே பகுதியில், நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள சித்தாமூர் ஒன்றியத்தில் படித்து முடித்த இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக சிப்காட் அமைத்து தருவேன்.

தண்ணீர் பந்தல் – பாலையூர் வழியாக இசிஆர் சாலையை இணைக்கும் வகையில் இணைப்புச் சாலை அமைத்து தருவேன் என்றார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ, வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது, அவர் பேசுகையில், ‘இந்தியாவில் மோடிக்கு எதிர்ப்பு அலை உருவாகியுள்ளது. மோடி கேரன்டி என்று கூறி வரும்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்னது போன்று ‘‘மோடியின் பேச்சுக்கு கேரண்டியும் இல்லை, வாரண்டியும் இல்லை’’ என்றார்.

அதனைத்தொடர்ந்து, கொளத்தூர், சித்தர்காடு, அமைந்தகரனை, சூனாம்பேடு, நுகும்பல், ஈசூர், கயப்பாக்கம் பூங்குணம், சித்தாமூர், மேல்மருவத்தூர், சோத்துப்பாக்கம், உள்ளிட்ட 50 கிராமங்களில் வேட்பாளர் செல்வம், செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு சூறாவளி பிரச்சாரம் செய்தார். இதில், சித்தாமூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஏழுமலை, ஒன்றிய செயலாளர் சிற்றரசு, மாவட்ட அவைத்தலைவர் இனியரசு, துணை பெரும் தலைவர் பிரேமா சங்கர், மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி ரவிக்குமார், டைகர் குணா, கூட்டமைப்பு தலைவர் நிர்மல் குமார், ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் புருஷோத்தமன், அவைத்தலைவர்கள் வரதராஜன், வெங்கடகிருஷ்ணன், ஒன்றிய துணை செயலாளர் நாகப்பன், முரளி, குமுதம் மதுரை, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பால்ராஜ், மீனவர் அணி அமைப்பாளர் பாரத், கொளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் தீபா முனுசாமி, இந்தியா கூட்டணி நிர்வாகிகள் ஓவியர் ரஞ்சித், தமிழினி ஆதவன், ரவி உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.

The post காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சித்தாமூர் ஒன்றியத்தில் சிப்காட் அமைத்து தருவேன்: திமுக வேட்பாளர் செல்வம் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: