காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 13 வேட்பு மனுக்கள் ஏற்பு, 18 மனுக்கள் நிராகரிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்த, 13 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. மேலும், 18 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. காஞ்சிபுரம் நாடாளுமன்ற (தனி) தொகுதி தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கடந்த 20ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. 25ம் தேதி திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சி, பகஜூன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட 8 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மறுநாள் உள்ளிட்ட 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். கடைசி நாளான நேற்று முன்தினம் ஏராளமான சுயேட்சை வேட்பாளர்கள் என காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர்.

கடைசி நாளான நேற்று முன்தினம் கூடுதல் வேட்பு மனு, மாற்று வேட்பாளர் மனு என மட்டும் 15 சுயேட்சை வேட்பாளர்கள் என 19 வேட்புமனு தாக்கல் செய்தனர். மொத்தத்தில், 25 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் 31 வேட்பு மனுக்கல் தாக்கல் செய்திருந்தனர். நேற்று வேட்பு மனுக்கள் பரிசீலனை என்பதால் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான கலைச்செல்வி மோகன் தலைமையில் அதிகாரிகள் கொண்ட குழு வேட்பு மனு பரிசீலனை செய்தனர்.
இதில், திமுக வேட்பாளர் க.செல்வம், அதிமுக வேட்பாளர் ராஜசேகர், பாமக சார்பில் ஜோதி வெங்கடேசன், நாம் தமிழர் சார்பில் சந்தோஷ் குமார், பிஎஸ்பி சார்பில் இளையராஜா மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் ரமேஷ், இளங்கோவன், கார்த்திகேயன், சூர்யா, செல்வம், நரேஷ் பாரதி, மோகனசுந்தரம், வெங்கடேசன் என 13 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மீதமுள்ள வேட்பு மனுக்கள் மாற்று வேட்பாளர் மற்றும் கூடுதல் வேட்பாளர் உள்ளிட்ட 18 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

The post காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 13 வேட்பு மனுக்கள் ஏற்பு, 18 மனுக்கள் நிராகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: