பலாப்பழத்தின் பயன்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

முக்கனிகளுள் ஒன்றாகக் கருதப்படும் பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் இருக்கும் சுளைகள் சுவையாகவும் கண்ணைக் கவரும்
வண்ணத்திலும் இருக்கும். பலாப்பழம் சுவையில் மட்டுமல்ல, அதில் அடங்கியுள்ள மருத்துவக் குணத்திலும் சிறப்புமிக்கது. இந்த பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்.பலாப்பழத்தின் இனிப்புச் சுவைக்குக் காரணம், இதில் உள்ள ஃப்ரக்டோஸ், சுக்ரோஸ் தான். பலாப்பழத்தைச் சாப்பிட்டவுடன் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கிறது. சோர்வாக இருக்கும்போது, இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் உடல் சோர்வு நீங்கி, புத்துணர்ச்சி கிடைக்கும்.

மனித இயக்கத்திற்கு உதவும் தைராய்டு ஹார்மோன் உடலில் உற்பத்தியாகவும், அதை உட்கிரகிக்கவும் தாமிரச்சத்து அவசியம். பலாவிலுள்ள தாமிரச்சத்து இதற்கு உதவிசெய்கிறது. பலாப்பழத்தில் வைட்டமின் ‘சி’ அதிகமாக உள்ளதால், மிகச்சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகவும் செயலாற்றுகிறது. வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களால் நோய்த்தொற்று உண்டாகாமல் தடுக்கிறது. வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டுகிறது.

பலாச்சுளைகளில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், ரத்த அழுத்தத்தை குறைத்து இதயநோய் வராமல் தடுக்கிறது.பலாப்பழத்திலுள்ள விட்டமின் ‘ஏ’ சத்து, பார்வைக் குறைபாடு வராமல் தடுக்கிறது. மாலைக்கண் நோயையும் குணமாக்குகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள பலாப்பழம், அல்சர், செரிமானக் கோளாறு, கண்களில் ஏற்படும் கோளாறு ஆகியவற்றை சரி செய்யும் தன்மையை உடையது. இதில் கலோரி மிகவும் குறைவாக இருப்பதால் இதயநோய் இருப்பவர்களுக்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது. நெய் அல்லது தேன் கலந்த பலாப்பழத்தை சாப்பிட்டால் இதயம், மூளை வளர்ச்சியடையும், நரம்புகளும் வலுப்படும்.

உடலும் ஊட்டம் பெறும். பலாப்பழத்திலுள்ள லிக்னன்ஸ், ஆர்கானிக் கூட்டுத்தொகுப்பான ஐசோஃப்ளேவன்ஸ், சபானின் ஆகியவை புற்றுநோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டுகிறது. இது தவிர, உடல் இளமைத் தோற்றத்தைப் பெற உதவுகிறது.குழந்தைகளுக்கு இந்த பழம் மிகவும் நல்லது. இதனை உண்பதால் எலும்புகள் வலுவடைகின்றன. இதில் மெக்னீசியம் அதிகம் இருப்பதால், இது எலும்பு சம்பந்தமான எந்த நோயும் வராமல் தடுக்கிறது.

தொகுப்பு: ரிஷி

The post பலாப்பழத்தின் பயன்கள்! appeared first on Dinakaran.

Related Stories: