மாமல்லபுரத்தில் பரபரப்பு சிற்ப கல்லூரி வளாகத்தில் தீ

மாமல்லபுரம்: மாமல்லபுரம் சிற்பக்கல்லூரி வளாகத்தில் திடீர் என தீ விபத்து ஏற்பட்டது. இதில் புற்கள், செடி, கொடிகள் எரிந்து நாசமானது. மாமல்லபுரம் இசிஆர் சாலையில் அரசு கட்டிட கலை மற்றும் சிற்ப கலை கல்லூரி இயங்கி வருகிறது. 250க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு, சுதை சிற்பம், கற்சிற்பம், மரச்சிற்பம், ஓவியம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் 4 ஆண்டு பயிற்றுவிக்கப்படுகிறது. இந்நிலையில், கல்லூரி வளாகத்தில் அழகிற்காக அமைக்கப்பட்ட புல் வெளிகள், செடி-கொடிகள் ஆகியவை கோடை வெயிலின் தாக்கத்தால் பழமை இழந்து காய்ந்து சருகாக கிடக்கிறது. இதனிடையே நேற்று சிற்பக் கலைக்கல்லூரி வளாகத்தில் காய்ந்திருந்த புல்வெளியில் நேற்று திடீரென்று தீ பிடித்தது. மளமளவென பற்றி எரிந்த தீயால் செடி, கொடிகள் எரித்து நாசமானது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மாமல்லபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் இன்பராஜ் தலைமையில் முதன்மை தீயணைப்பு வீரர் வெங்கட கிருஷ்ணன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். 2 ஏக்கர் பரப்பளவில் இருந்த புற்கள், செடி, கொடிகள் முழுவதும் தீயில் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து, மாமல்லபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post மாமல்லபுரத்தில் பரபரப்பு சிற்ப கல்லூரி வளாகத்தில் தீ appeared first on Dinakaran.

Related Stories: