மாற்றுத்திறனாளிகள் பழைய பஸ்பாசை ஜூன் 3ம் தேதி வரை பயன்படுத்தலாம்: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பழைய பஸ்பாசை ஜூன் 30ம் தேதி வரை பயன்படுத்தலாம் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயணச்சலுகை அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இலவச பயணச்சலுகை 2023-2024ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை பழைய பஸ்பாசை வைத்திருக்கும் கல்வி பயில்பவர்கள், பணிக்கு செல்பவர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்வபவர்கள் என அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் ஜூன் 30ம்தேதி வரை 3 மாதத்திற்கு, பயணம் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் வளாகம், காஞ்சிபுரம் முகவரி மற்றும் 044-2999 8040 என்ற எண்ணை தொடர்பு கொண்டு வேண்டிய விவரங்களை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post மாற்றுத்திறனாளிகள் பழைய பஸ்பாசை ஜூன் 3ம் தேதி வரை பயன்படுத்தலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: