பொம்மை விமானத்தை தலையில் கட்டி வந்து சுயேட்சை வேட்பாளர் மனு தாக்கல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பொம்மை விமானத்தை தலையில் கட்டிக் கொண்டு வந்து சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார். தர்மபுரி மாவட்டம் மஞ்சவாடிகனவாய் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் (63). இவர் எட்டு வழிச்சாலை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், ஸ்ரீபெருமந்தூர் நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்திருந்தார். இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக பழனியப்பன் நேற்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது, தலையில் பொம்மை விமானத்தை கட்டிக்கொண்டு வேட்புமனு தாக்கல் செய்ய காத்திருந்தார். இதனை அங்கிருந்தவர்கள் அச்சரியத்துடன் பார்த்தனர். அப்போது, அவர் கூறுகையில், ‘சென்னை அருகே பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைந்தால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, மாற்று இடத்தில் விமான நிலையம் அமைக்கக்கோரி தலையில் பொம்மை விமானத்தை வைத்துக்கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்தேன்’ என்றார்.

The post பொம்மை விமானத்தை தலையில் கட்டி வந்து சுயேட்சை வேட்பாளர் மனு தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: