மேலும் அவர்கள் ஹெல்மெட் உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்துக் கொள்ளவில்லை. அதேபோல் மற்றொரு வீடியோவில் வாலிபர் ஒருவர் பைக்கை ஓட்டிச் செல்கிறார். அவரது பின்னால் அமர்ந்திருந்த இளம்பெண், திடீரென பைக்கின் மீது நின்று ெகாண்டு ஹோலி கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். திடீரென அந்த இளைஞர் பிரேக் போட்டவுடன், அந்தப் பெண் கீழே விழுந்தார். இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோக்களை பார்த்து, பலரும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்தனர். இந்த சம்பவம் நொய்டா போலீசாரின் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களுக்கு ரூ.33,000 அபராதம் விதித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக நொய்டா போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
The post ‘ஹோலி’ கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபாசமாக நடந்து கொண்ட இளம்பெண்கள்: ரூ.33,000 அபராதம் விதித்த போலீஸ் appeared first on Dinakaran.