கொள்ளிடம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1350 மதுபாட்டில் பறிமுதல்

*பெண் கைது

கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே கொடக்காரமூலை கிராமத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1350 புதுச்சேரி மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒரு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.நாடாளுமன்ற தேர்தல் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார் மீது காவல்துறை சார்பில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி கொள்ளிடம் அருகே கொடக்காரமூலை கிராமத்தில் வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி சீர்காழி மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பி லாமேக் மேற்பார்வையில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயா, சிறப்பு தனிப்படை எஸ்ஐ மணிகண்ட கணேஷ் மற்றும் போலீசார் கொடக்காரமூலை கிராமத்திற்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு வீட்டில் போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது, 180 மில்லி அளவு கொண்ட புதுச்சேரி மாநில மதுபான பாட்டில்கள் 1,350 எண்ணிக்கையில் 243 லிட்டர், மதுபானத்தை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அதனை பதுக்கி வைத்திருந்த அன்புச்செல்வி (36) என்ற பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட புதுச்சேரி மது பாட்டில்களின் மதிப்பு ரூ1.5 லட்சம்.

The post கொள்ளிடம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1350 மதுபாட்டில் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: