கொரோனா காலத்தில் மருத்துவமனையிடம் ரூ.162 கோடி நிதி பாஜ பெற்றது ஏன்? விசாரணை நடத்த சிவசேனா உத்தவ் அணி கோரிக்கை

மும்பை: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி தலைவர் சஞ்சய் ராவத் கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் எழுதியுள்ள கட்டுரையில், “மும்பையில் பேசிய ராகுல் காந்தி, அதிகார பலம், பண பலம் ஆகிய தீய சக்திகளுக்கு எதிராக போராட வேண்டும் என்று கூறினார். ஆனால் ராகுலின் பேச்சை இந்துத்துவா, பெண்களுக்கு எதிரான பேச்சு என மோடி திரித்து தவறான கருத்தை பரப்பி வருகிறார்.” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, “யசோதா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை 2021 அக்டோபர் முதல் 2023 அக்டோபர் வரை ரூ.162 கோடி தேர்தல் பத்திரங்களை வாங்கி உள்ளது. நோயாளிகளிடம் இருந்து வருமானம் சம்பாதிக்கும் ஒரு மருத்துவமனை எதற்காக தேர்தல் பத்திரங்களை வாங்க வேண்டும். கொரோனா தொற்று பாதிப்பின்போது மருத்துவமனையிடம் இருந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜ எதற்காக நிதி வாங்கியது. இது பற்றி விசாரணை நடத்த வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.

The post கொரோனா காலத்தில் மருத்துவமனையிடம் ரூ.162 கோடி நிதி பாஜ பெற்றது ஏன்? விசாரணை நடத்த சிவசேனா உத்தவ் அணி கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: