நூறு சதவீதம் வாக்களிப்பது கோத்தகிரி பேரூராட்சியில் உறுதி மொழி ஏற்பு

 

கோத்தகிரி,மார்ச்24: கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சியில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலின் போது அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.

முன்னதாக மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்படி கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் சதாசிவம் தலைமையில்,சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் முன்னிலையில் கோத்தகிரி பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள்,தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு தேர்தலின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் வாக்களிப்பது என்பது ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயக கடைமை,மேலும் பணத்திற்காக வாக்களிப்பது தவறு.கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

The post நூறு சதவீதம் வாக்களிப்பது கோத்தகிரி பேரூராட்சியில் உறுதி மொழி ஏற்பு appeared first on Dinakaran.

Related Stories: