புழல் மத்திய சிறை அருகே உடைந்த குடிநீர்குழாயை சீரமைக்க கோரிக்கை

 

புழல், மார்ச் 24: புழல் மத்திய சிறை அருகே உடைந்த குழாயை சீரமைக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர். புழல் மத்திய சிறைச்சாலை எதிரில் உள்ள சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலை மற்றும் காந்தி பிரதான சாலை இணைக்கும் பகுதியில் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டு இருந்த குடிநீர் குழாயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடியிருப்பு பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கும் நேரங்களில் உடைந்த குழாயில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறி சாலைகளில் தேங்கி நிற்பதால் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது.

இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும், பாதசாரிகளும் நடந்து செல்ல முடியாமல் பரிதவிக்கின்றனர். இதுதொடர்பாக, புழல் பகுதியில் உள்ள சென்னை குடிநீர் வாரிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் குழாய் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. கோடை காலம் தொடங்கிய நிலையில், தண்ணீர் தேவை அதிகரிக்கும் சூழலில் குழாய் உடைப்பை உடனடியாக சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.

The post புழல் மத்திய சிறை அருகே உடைந்த குடிநீர்குழாயை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: