நடிகருடன் போட்டோ எடுத்த வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகரான டொவினோ தாமஸ் கேரள மாநில தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் விழிப்புணர்வு தூதராக உள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் திருச்சூர் தொகுதி இடதுசாரி கூட்டணி வேட்பாளரான சுனில்குமார், டொவினோ தாமசை சந்தித்து அவருடன் எடுத்த போட்டோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இது குறித்து அறிந்த நடிகர் டொவினோ தாமஸ், தான் தேர்தல் ஆணையத்தின் தூதராக இருப்பதால் தன்னுடைய போட்டோவை பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவது சட்டவிரோதமாகும் என்று கூறினார்.

இதையடுத்து சுனில்குமார் அந்த போட்டோவை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கினார். இந்நிலையில் சுனில்குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சூர் மாவட்ட பாஜ சார்பில் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சுனில்குமாரிடம் மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டது. தனக்கு நடிகர் டொவினோ தாமஸ் தேர்தல் ஆணையத்தின் தூதர் எனத் தெரியாது என்று அவர் விளக்கம் அளித்தார். அதை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம், இது போன்ற நடவடிக்கைகளில் இனி ஈடுபடக் கூடாது என்று அவருக்கு எச்சரிக்கை விடுத்தது.

The post நடிகருடன் போட்டோ எடுத்த வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: